பால தோஷத்தை நீக்கும் பாலாம்பிகை


பால தோஷத்தை நீக்கும் பாலாம்பிகை
x

பால தோஷம் உள்ள குழந்தைகளின் பெற்றோர், திருவாசி தலத்தின் அம்பாளான பாலாம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.

திருச்சி

திருச்சி மாவட்டம் திருவாசி எனும் ஊரில் அமைந்துள்ளது மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோவில். தேவார பாடல்பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் 62-வது தலமாகும். சோழ மன்னன் திருப்பணி செய்த திருக்கோவில், பார்வதி தேவி அன்னப் பறவையாக இறைவனை வழிபட்ட தலம், சுந்தரருக்கு இறைவன் பொற்கிழி தந்த கோவில் என பல்வேறு சிறப்புகளை கொண்ட இத்தலம் பால தோஷத்தை நீக்கும் தலமாக விளங்குகிறது.

பாலதோஷம் உள்ள குழந்தைகளின் பெற்றோர், இத்தலத்தின் அம்பாளான பாலாம்பிகைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் நோய்நொடி இன்றி சிறப்பாக வாழ்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும் வயிற்று வலி, வாத நோய், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களை தீர்க்கும் பரிகாரத் தலமாகவும் இந்த திருவாசி தலம் உள்ளது.

கோவிலில் தினமும் அர்த்தஜாம பூஜையில் பாலாம்பிகை அன்னைக்கே முதலில் பூஜை நடக்கிறது. திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் அன்னையை வழிபட்டு வந்தால் வேண்டுதல் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

1 More update

Next Story