திருவண்ணாமலையில் எந்தெந்த நாளில் கிரிவலம் சென்றால் என்னென்ன பலன்கள்..?


திருவண்ணாமலையில் எந்தெந்த நாளில் கிரிவலம் சென்றால் என்னென்ன பலன்கள்..?
x

பிரதோஷத்தில் கிரிவலம் வருவது சகல பாவங்களையும் களைந்து விடும் என்பது நம்பிக்கை.

திருவண்ணாமலையில் சிவனே மலையாக இருப்பதால் திருவண்ணாமலையில் உள்ள கோவிலைவிட மலைக்கே அதிக சிறப்பு உள்ளது. அத்தகைய மலையை கிரிவலம் வருவது சிவனையே வலம் வருவதுதான். 14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த கிரிவலப் பாதையை வலம் வருவதன் மூலமாக இப்பிறவியில் மட்டுமல்லாது, முற்பிறவியில் செய்த பாவங்களும் விலகும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை கிரிவலம் வந்தால் சிவலோக பதவியும், திங்கட்கிழமை வலம் வந்தால் இந்திரலோக பதவியும் கிடைக்கும். செவ்வாய்க்கிழமை வலம் வந்தால் கடன், வறுமை விலகும். புதன்கிழமை வலம் வந்தால் கலைகளில் தேர்ச்சியும், வியாழக்கிழமை வலம் வந்தால் ஞானமும், வெள்ளிக்கிழமை வலம் வந்தால் வைகுண்ட பதவியும் கிடைக்கப்பெறுவார்கள். சனிக்கிழமை அன்று வலம் வருவது பாவப்பிணிகளில் இருந்து மக்களை காக்கும்.

பெளர்ணமியில் கிரிவலம் வந்தால் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அமாவாசை தினத்தில் வலம் வந்தால் கவலைகளும் அகலும். பிரதோஷத்தில் வலம் வருவது சகல பாவங்களையும் களைந்து விடும். ஏகாதசியில் வலம் வந்தால் சகல பீடைகளும் தொலையும், சிவராத்திரியில் வலம் வருவது பிறவிப்பிணியில் இருந்து நம்மை காத்து, பாவங்களை விலக்கும். மாசி மகத்தில் அண்ணாமலையை வலம் வருபவர்களுக்கு தேவர்களுக்கு நிகரான பதவி கிடைக்கும். தட்சிண புண்ணிய காலத்தில் வலம் வருவது தேவர்களால் கணிக்க முடியாத சிறப்பையும், உத்தராயண புண்ணிய காலத்தில் வலம் வருவது உயர்ந்த பதவியையும் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.


Next Story