சித்திரை பிரம்மோற்சவம்: அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்


சித்திரை பிரம்மோற்சவம்: அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்
x

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ், மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா உள்ளிட்ட அதிகாரிகள் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் நகரில் சைவ சமயக் குறவர்கள் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலமான இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா மே 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 3-ம் தேதி அதிகார நந்தி, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றன.

விழாவின் முக்கிய திருவிழாவான தேர்த் திருவிழா இன்று காலை 9 40 மணிக்கு விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண் ராஜ், மதுராந்தகம் டிஎஸ்பி மேகலா, செயல் அலுவலர் தமிழரசி மற்றும் உபயதாரர், கிராம முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து 'ஆட்சீஸ்வரருக்கு அரோகரா' என முழக்கமிட்டபடி தேர் இழுத்தனர்.

1 More update

Next Story