திருப்பதியில் 19 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்துக்கு 19 மணிநேரம் ஆகிறது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமலையில் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பினர். அதேபோல், நாராயணகிரி தோட்டத்தில் உள்ள 2 செட்டுகளில் பக்தர்கள் நிரம்பினர்.
‘டைம் ஸ்லாட்’ டோக்கன்கள் இல்லாத இலவச தரிசன பக்தர்களுக்கு 19 மணி நேரம் ஆகிறது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை 49 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று முன்தினம் 84 ஆயிரத்து 930 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 34 ஆயிரத்து 930 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் காணிக்கையாக ரூ.3 கோடியே 6 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






