செங்கல்பட்டு ஆத்தூர் வழித்துணை பணீஸ்வரர் கோவிலில் கோ பூஜை

கோபூஜைக்கு முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
Published on

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் கிராமத்தில் கர்ப்பரட்சாம்பிகை சமேத வழித்துணை பணீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

புத்திர பாக்கியம் வேண்டுவோர் மற்றும் திருமணம் கைகூடாமல் கவலைப்படுவோருக்கு சிறந்த பரிகார தலமாகவும், குரு ஸ்தலமாகவும் இந்த தலம் விளங்குகிறது. இங்கு சுவாமியின் திருவருளால் நித்திய பூஜைக்கு கங்கை தீர்தத்தால் அபிஷேகம் நடைபெறுகிறது. இத்தீர்த்தத்தை உட்கொண்டால் வியாதிகள் குணமடையும் என்பது நம்பிக்கை.

இக்கோவிலில் வாரம்தோறும் வெள்ளிக் கிழமை காலையில் கோ பூஜை நடைபெறும். அவ்வகையில் வெள்ளிக்கிழமையான இன்று காலை 6.00 மணியளவில் கோ பூஜை நடைபெற்றது. முன்னதாக சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com