கார்த்திகை பிரம்மோற்சவம்: சர்வ பூபால, கருட வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா


கார்த்திகை பிரம்மோற்சவம்: சர்வ பூபால, கருட வாகனங்களில் பத்மாவதி தாயார் வீதிஉலா
x

வாகன வீதி உலா முன்னால் பல்வேறு கலை குழுவினரின் நடன, நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சர்வ பூபால வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

வாகன வீதி உலா முன்னால் பல்வேறு கலை குழுவினரின் நடன, நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. கேரள செண்டை மேளம் உள்ளிட்ட இறை இசை வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து 5 மணிவரை தங்கத்தேரோட்டம் நடந்தது. உற்சவர் பத்மாவதி தாயார் தங்க ஆபரண அலங்காரத்தில் தங்கத்தேரில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தங்கத்தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர்.

பின்னர் இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கருட வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலின் நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. என பக்தி கோஷம் எழுப்பி தாயாரை தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story