வனபோஜனம்.. தீப உற்சவம்: திருப்பதியில் அடுத்தடுத்த ஆன்மிக நிகழ்வுகள்


திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
x

வனபோஜன உற்சவத்தை முன்னிட்டு வரும் 17-ம் தேதி மாலை திருமலையில் நடைபெறும் ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

திருப்பதி:

திருப்பதி திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வனபோஜன உற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு வரும் 17-ம் தேதி (17.11.2024) கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற உள்ளது.

இதையொட்டி அன்று காலை சிறிய கஜவாகனத்தில் மலையப்பர் பார்வேட்டை மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுவார். இதேபோல் ஒரு பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவி ஊர்வலமாக வருவர்.

சேஷாசல மலைத்தொடரின் அடர்ந்த காட்டுப் பகுதியில் உற்சவ மூர்த்திகளுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெறும். பிறகு அங்குள்ள பக்தர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகளுக்கு வன போஜனம் வழங்கப்படும்.

இந்த உற்சவத்தை முன்னிட்டு வரும் 17-ம் தேதி மாலை திருமலையில் நடைபெறும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

கார்த்திகை தீப உற்சவம்: நவம்பர் 18-ம் தேதி (18.11.2024) கார்த்திகை தீப உற்சவம் நடைபெறும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மாலையில் திருப்பதி நகரில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலக வளாகத்தில் கார்த்திகை தீப உற்சவம் நடைபெற உள்ளது. இதில் தேவஸ்தான அதிகாரிகள், பெண் ஊழியர்கள் பங்கேற்று நூற்றுக்கணக்கான தீபங்கள் ஏற்றி சிறப்பு பூஜையில் ஈடுபடுவர். இதற்காக தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

1 More update

Next Story