கோவில்விளை முத்தாரம்மன் கோவில் திருவிழா.. திருத்தேரில் அம்மன் பவனி


கோவில்விளை முத்தாரம்மன் கோவில் திருவிழா.. திருத்தேரில் அம்மன் பவனி
x

திருத்தேர் பவனியைத் தொடர்ந்து சிவசுடலைமாடசுவாமிக்கு அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

கன்னியாகுமரி

நாகர்கோவில் அருகே உள்ள கோவில்விளை ஸ்ரீ முத்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில் கார்த்திகை விளக்கு பொலிவு விழா மற்றும் பஜனை பட்டாபிஷேக விழா இரண்டு நாட்கள் விமரிசையாக நடைபெற்றது.

விழாவின் முதல் நாளான 14-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு மங்கள இசை, 5.30 மணிக்கு அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு தீபாராதனை, 8:30 மணிக்கு பிரசாதம் வழங்குதல், 9 மணிக்கு நாதஸ்வரம், 9.30 மணிக்கு சாஸ்தா கதை வில்லிசை, 10 மணிக்கு தீபாராதனை, 10.30 மணிக்கு பெருமாள் சுவாமி கதை வில்லிசை, 11 மணிக்கு தீபாராதனை 11.30 மணிக்கு பத்திரகாளியம்மன் கதை வில்லிசை, அதனைத் தொடர்ந்து தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு முத்தாரம்மன் கதை வில்லிசை, 2 மணிக்கு அம்மனுக்கு அலங்கார தீபாராதனை, 2.30 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

மாலை 6.30 மணிக்கு காலசுவாமி கதை வில்லிசை, இரவு 7.30 மணிக்கு காலசுவாமிக்கு தீபாராதனை, 8 மணிக்கு மாரியம்மன் கதை வில்லிசை, 9 மணிக்கு மாரியம்மனுக்கு தீபாராதனை, 10 மணிக்கு உஜ்ஜைனி மாகாளி கதை வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு உஜ்ஜைனி மாகாளியம்மனுக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

இரண்டாம் நாளான நேற்று திங்கட்கிழமை காலை 5 மணிக்கு சுப்ரபாதம், 5.30 மணிக்கு நாதஸ்வரம், 6:00 மணிக்கு செண்டை மேளம், 6:30 மணிக்கு மேளதாளம் முழங்க திருத்தேரில் முத்தாரம்மன் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள்பாலித்தார். 10 மணிக்கு சிவசுடலைமாடசுவாமி கதை வில்லிசை, நண்பகல் 12:30 மணிக்கு சிவசுடலைமாடசுவாமிக்கு அலங்கார தீபாராதனை, 2 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

கொடை விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் பரமேஸ்வரலிங்கம், உபதலைவர் செல்வகுமார், செயலாளர் அனந்தகிருஷ்ணன், உபசெயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் பாலசுப்பிரமணியன், கணக்காளர் சுயம்பு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

1 More update

Next Story