மதுரை: குறவன்குளம் ராஜகாளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்


மதுரை: குறவன்குளம் ராஜகாளியம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம்
x

மண்டலாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்று, சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றன.

மதுரை

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி, குறவன்குளம் கிழக்கு மந்தை திடலில் அமைந்துள்ள ராஜவம்ச சாம்பவர் குல பெருமக்கள் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீராஜ காளியம்மன் கோவிலில் 48வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.

இந்த சிறப்பு யாகசாலை பூஜையில் 16 வகை ஹோமங்கள் அதனை தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, பின்னர் மகா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா அபிஷேகம் நடந்தது. மண்டலாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story