சென்னை வடபழனி முருகன் கோவிலில் மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை

கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வாக, 27ம் தேதி இரவு 8.00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது.
வடபழனி முருகன் கோவிலில் இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா நடைபெற்று வருகிறது. நேற்று காலை 9.00 மணிக்கு, மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை துவங்கியது. இரவு மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். வரும் 26ம் தேதி வரை காலை 7.00 மணிக்கு லட்சார்ச்சனை துவங்குகிறது.
ஒவ்வொரு நாளும் இரவும் முறையே சந்திர பிரபை. ஆட்டுக்கிடா, நாக வாகனம், மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணியர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
27ம் தேதி காலை 6.00 மணிக்கு, மகா கந்த சஷ்டி லட்சார்ச்சனை துவங்கி, உச்சி காலத்துடன் நிறைவடைகிறது. அதை தொடர்ந்து, தீர்த்தவாரி, கலசாபிஷேகம் நடக்கிறது. இரவு, 8.00 மணிக்கு சூரசம்ஹாரம் நடக்கிறது. பின், தெய்வானை சமேத சண்முகப் பெருமான் மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது. வரும், 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் திருக்கல்யாணம், மயில் வாகன புறப்பாடு நடக்கிறது. இரவு 8.00 மணிக்கு திருக்கல்யாண விருந்து நடக்கிறது. வரும் 29ம் தேதி முதல் நவம்பர் 1-ம் தேதி வரை இரவு சுவாமி புறப்பாடு நடக்கிறது.






