நாகை வாய்மேடு பிடாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்


நாகை வாய்மேடு பிடாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 14 July 2025 1:31 PM IST (Updated: 14 July 2025 1:32 PM IST)
t-max-icont-min-icon

கும்பாபிஷேகத்தில் வாய்மேடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் வாய்மேடு கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிடாரியம்மன் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த 11-ம் தேதி அனுக்ஞை விக்னேஷ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. 12-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்று, அதனை தொடர்ந்து 13-ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நிறைவு பெற்று, நேற்று காலை நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதன்பின் மகா பூர்ணாஹுதி நடைபெற்று சிறப்பு தீபாராதனைக்கு பிறகு கடம் புறப்பாடு நடைபெற்றது.

மங்கள வாத்தியம் முழங்க புனித நீர் அடங்கிய கலசத்தை சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலின் மேல் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் வாய்மேடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story