திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் மக நட்சத்திர வழிபாடு

கல்யாண சுந்தரேஸ்வரருக்கு புஷ்ப அலங்காரம் செய்து 1008 வெள்ளி தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
குடவாசல் அருகே திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான திருவீழிமிழலை வீழிநாதர் திருக்கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர், அம்பாளுக்கு மக நட்சத்திரத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது.
வீழிநாத சுவாமி, சுந்தர குஜாம்பிகை அம்பாளுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. காலை 11 மணி அளவில் கல்யாண சுந்தரேஸ்வரருக்கு புஷ்ப அலங்காரம் செய்து 1008 வெள்ளி தாமரை மலர்கள் கொண்டு சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
அதன்பின், சுந்தர குஜாம்பிகை அம்பாளுக்கு பூரம் நட்சத்திர வழிபாட்டில் பால், பன்னீர், தேன், திரவியப்பொடி, இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாட்டிற்கான ஏற்பாடுகளை கோவில் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், மக நட்சத்திர வழிபாட்டு குழு செயலாளர் சீதாராமன் ஆகியோர் செய்திருந்தனர்.






