மயிலாடுதுறை கூட்டுறவு நகர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்த பின்னர் மூலவர் விநாயகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை அருகே வள்ளாலகரம் ஊராட்சி கூட்டுறவு நகரில் மகா கற்பகவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி கடந்த 24-ந்தேதி காலை கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நேற்று காலை இரண்டாம் கால மற்றும் இரவு மூன்றாம் கால யாக பூஜைகள் மற்றும் கோ பூஜை, கஜ பூஜை, லட்சுமி பூஜை ஆகியவை நடந்தன.
இன்று காலை நான்காம் கால யாகபூஜை நடந்து பூர்ணாஹுதி செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கடங்கள் புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து, 9.39 மணியளவில் கோவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் 9.45க்கு மூலவர் விநாயகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் ஆரோக்கியமதன், அறங்காவலர் சத்யாராஜேஷ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து இரவு விநாயகர் வீதி உலா நடக்கிறது.






