புஷ்பவனம் திரௌபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா

திரௌபதி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீ குண்டத்தின் எதிரே எழுந்தருளியதும், பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம்
வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் கிராமத்தில் பழமை வாய்ந்த திரெளபதி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாத தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.
அம்மன் திருக்கல்யாணம், துகில் தருதல், கிருஷ்ணன் தூது, அர்ஜுனன் தபசு, அரவான் களப்பலி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன்பின்னர் முக்கிய நிகழ்வான தீமிதி விழா நடைபெற்றது. இதையொட்டி, அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீ குண்டத்தின் எதிரே எழுந்தருளினார். விரதம் இருந்த 500-க்கும் மேற்பட்டபக்தர்கள் மஞ்சள் ஆடை உடுத்தி தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழாவில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Related Tags :
Next Story






