பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேரோட்டம்


பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் தேரோட்டம்
x

பாண்டமங்கலத்தில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் திருத்தேர் திருவிழா கடந்த 18- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

19-ஆம் தேதி முதல் 24- ஆம் தேதி வரை தினந்தோறும் காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்ன வாகனம், சிம்ம வாகனம், சிறிய திருவடி அனுமந்த வாகனம், பெரிய திருவடி கருட சேவை, சேஷ வாகனம், யானை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 25- ஆம் தேதி மாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு புஷ்ப விமான புறப்பாடும், ராஜமுடி சேவை மற்றும் குதிரை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

நேற்று 26-ஆம் தேதி அதிகாலை 5.30 முதல் 6.30-க்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவில் வளாகம் அருகே நிலையை அடைந்தது.

இன்று முதல் 30- ஆம் தேதி வரை வராக புஷ்கரணியில் தீர்த்தவாரியும், திருமஞ்சனம், வசந்த உற்சவமும் மற்றும் கருட வாகன புறப்பாடும் நடைபெறுகிறது.

1 More update

Next Story