நாங்குநேரி திருவேங்கடமுடையார் கோவில் கும்பாபிஷேகம்

திருவேங்கடமுடையார் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திருநெல்வேலி
நாங்குநேரி தேரடி வீதியில் உள்ள திருவேங்கடமுடையார் கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவில் சிதிலமடைந்த நிலையில் அதை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 30-ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா தொடங்கியது.
தொடர்ந்து யாக சாலை பூஜை, ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்றது. யாக சாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை காலை 6 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் விமான கோபுரம், மூலஸ்தானம், மூல மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி வீதியுலா நடந்தது.
Related Tags :
Next Story






