திருச்சூரில் நாளை பூரம் திருவிழா - தெற்கு கோபுர நடையை திறந்து வைத்த யானை


திருச்சூரில் நாளை பூரம் திருவிழா - தெற்கு கோபுர நடையை திறந்து வைத்த யானை
x
தினத்தந்தி 5 May 2025 10:58 PM IST (Updated: 5 May 2025 11:01 PM IST)
t-max-icont-min-icon

திருச்சூர் பூரம் திருவிழா விளம்பர நிகழ்வு இன்று நடைபெற்றது.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருச்சூரில் பிரசித்தி பெற்ற வடக்குநாதர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பூரம் திருவிழா கோலாகலமாக கொண்டாப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பூரம் திருவிழா மே 6-ந்தேதி(நாளை) நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு பூரம் திருவிழா விளம்பர நிகழ்வு இன்று நடைபெற்றது. இதன்படி காலை 8 மணியளவில், செண்டை மேளம் முழங்க எர்ணாகுளம் சிவக்குமார் என்ற யானை நைத்தலக்காவு பகவதி சிலையுடன் தெற்கு கோபுர நடையை திறந்தது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story