சோழவந்தான் பிரளயநாதசுவாமி கோவிலில் பிரதோஷ விழா

சுவாமியும் அம்பாளும் திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில், விசாக நட்சத்திரத்திற்குரிய திருத்தலமான பிரளயநாத சுவாமி ஆலயத்தில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டி சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், வெண்ணெய், நெய், திரவியம், மஞ்சள், மா பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் திருக்கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானமும் நடைபெற்றது.
இதேபோல திருவேடகம் ஏலவார் குழலி சமேத ஏடகநாத சுவாமி திருக்கோவிலில், தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேளத மூல நாதர் கோவில் கீழ மாத்தூர் மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் மற்றும் சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது.






