ரத சப்தமி விழா.. திருச்சானூரில் நாளை மறுநாள் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்


ரத சப்தமி விழா.. திருச்சானூரில் நாளை மறுநாள் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
x

​​கோவில் வளாகம், சுவர்கள், கூரைகள், பூஜை பொருட்கள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு நறுமண பொருட்கள் கலந்த புனித நீர் தெளிக்கப்படும்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரும் 20-ம் தேதி ரத சப்தமி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. விழாவை முன்னிட்டு நாளை மறுநாள் (20.1.2026) கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடைபெற உள்ளது.

இந்த சடங்கின் ஒரு பகுதியாக, அதிகாலையில் சுப்ரபாத சேவையுடன் தாயாரை துயிலெழுப்பி பூஜை செய்கின்றனர். அதன்பின்னர், காலை 6.30 மணி முதல் 9.00 மணி வரை ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறும். ​​அப்போது கோவில் வளாகம், சுவர்கள், கூரைகள், பூஜை பொருட்கள் மற்றும் பிற பொருட்கள் அனைத்தும் நீரால் முழுமையாக சுத்தம் செய்யப்படும்.

பின்னர், நாமக்கோப்பு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சக்கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம் மற்றும் கிச்சிலிக்கிழங்கு போன்ற நறுமணப் பொருட்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படும்.

ஆழ்வார் திருமஞ்சனம் நிறைவுடைந்ததும், காலை 9.30 மணி முதல் பக்தர்கள் தாயாரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

1 More update

Next Story