சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாகப் பெருவிழா: ஜூன் 1-ம் தேதி கொடியேற்றம்


சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாகப் பெருவிழா: ஜூன் 1-ம் தேதி கொடியேற்றம்
x
தினத்தந்தி 28 May 2025 1:48 PM IST (Updated: 28 May 2025 1:50 PM IST)
t-max-icont-min-icon

வைகாசி விசாகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஜூன் 9-ம் தேதி நடைபெறும்.

சேலம்

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக பெருவிழா 1-ந் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து இரவு 7 மணிக்கு பூத வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடக்கிறது. தினமும் காலையில் 8.30 மணிக்கு பல்லக்கில் சுவாமி புறப்பாடு நடக்கிறது.

2-ந் தேதி இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் புறப்பாடு நடக்கிறது. 3-ந்தேதி இருதலைப்பட்சி வாகனத்திலும், 4-ந்தேதி நாக வாகனத்திலும் புறப்பாடு நடக்கிறது. 5 -ந் தேதி மாலை 4 மணிக்கு திருக்கல்யாணம், பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, வெள்ளி ரிஷப வாகன காட்சி நடக்கிறது. 6-ந் தேதி யானை வாகனத்திலும், 7-ந் தேதி கைலாச வாகனத்திலும், 8-ந் தேதி குதிரை வாகனத்திலும் அம்மன் புறப்பாடு நடக்கிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 9-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் தீபாரதனை வழிபாடு நடக்கிறது. அதனைத் தொடர்ந்து 7 மணிக்கு சுவாமி திருத்தேரில் எழுந்தருள்கிறார். காலை 9 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. தேரோட்ட நிகழ்வில் அமைச்சர் ராஜேந்திரன், மேயர் ராமச்சந்திரன், கலெக்டர் பிருந்தாதேவி, செல்வகணபதி எம்.பி., சட்டமன்ற உறுப்பினர்கள், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

1 More update

Next Story