மக்களை காக்கும் சப்த முனீஸ்வரர்


மக்களை காக்கும் சப்த முனீஸ்வரர்
x

சப்தமுனிகளில் சிவமுனியும், மஹாமுனியும் பல பெயர்களில் எல்லை காவல் தெய்வங்களாகவும் ஊர் தெய்வங்களாகவும் உள்ளனர்.

உலககைக் காக்கும் பொருட்டு, உலகில் நீதி, வளம், மழை, தொழில் செழிக்கவும், தீயசக்திகளை அழிக்கவும் வீரபத்திரரின் அவதாரமாக சிவபெருமான் தன்னில் இருந்து சப்த முனிகளை தோற்றுவித்து அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனி கட்டளை அருளி, மக்களை காக்க படைத்தாக புராணங்களில் குறிப்பிட்டுள்ளது.

சிவமுனி:

சிவபெருமானின் முகத்தில் இருந்து தோன்றியதால் சிவாம்சம் பொருந்திய தெய்வமாக சிவமுனி திகழ்கிறார். இவர் அபய மூர்த்தியாக வேண்டுதலை நிறைவேற்றி தருகிறார்.

மஹாமுனி:

அளவில்லாத தெய்வ சக்தியை கொண்டிருப்பதால் தீயவற்றை அழித்து காக்கும் மஹாசக்தியாக, தொழில் வளம் பெருக்கும் சக்தியாக மஹாமுனி விளங்குகிறார். வியாபாரம், வாழ்வில் உள்ள தடைகளை விலக்கி, நம்பிக்கையோடு வேண்டுபவர்க்கு வேண்டுதலை நிறைவேற்றி தருபவர் இவர்.

வாழமுனி:

வனங்களில் வசிக்கும் காபாலிகள் இனத்தவர் போற்றி வணங்கும் தெய்வம் வாழமுனி.

தவமுனி:

தேவர்கள், ரிஷிகள் மற்றும் யாத்ரீகர்களின் வழியில் வரும் தீமைகளை விலக்கி காக்கும் தெய்வம் தவமுனி.

தருமமுனி:

தருமச் செயல்களை காத்து, தீய செயல்களை அழித்து காக்கும் தெய்வம் தருமமுனி.

ஜடாமுனி:

வனங்களை காப்பவர், ருத்ராட்ச மாலைகள் அணிந்து இருப்பவர். நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளை படைத்து காக்கும் தெய்வம் ஜடாமுனி.

நாதமுனி:

தேவகணங்களையும், பூதகணங்களையும் காத்து ரட்சிக்கும் தெய்வம் நாதமுனி.

சப்தமுனிகளில் இப்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், சிவமுனியும், மஹாமுனியும் பல பெயர்களில் எல்லை காவல் தெய்வங்களாகவும் ஊர் தெய்வங்களாகவும் வழிபடப்படுகின்றனர்.

1 More update

Next Story