சரஸ்வதி பூஜை- ஆயுத பூஜை கொண்டாட்டம்


சரஸ்வதி பூஜை- ஆயுத பூஜை கொண்டாட்டம்
x

சரஸ்வதி பூஜையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இந்துக்களின் முக்கிய பண்டிகையாக நவராத்திரி விழாவும் ஒன்று. நவராத்திரி விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை-ஆயுத பூஜை இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், தொழிலில் வளர்ச்சி அடையவும் கல்விக் கடவுளாம் சரஸ்வதி தேவிக்கு இன்று சிறப்பு பூஜை செய்து வழிபடுகின்றனர்.

சரஸ்வதி பூஜையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் வீடுகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆயுத பூஜை கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. தொழில் உபகரணங்கள், ஆயுதங்கள், வாகனங்கள், புத்தகங்கள், இசைக்கருவிகள் என தொழிலுக்கு பயன்படுத்தும் பொருட்களை கலைவாணி முன்பு வைத்து, மலர்கள், சந்தனம், வஸ்திரம் ஆகியவற்றால் அலங்கரித்து பூஜை செய்தனர்.

கல்வி நிறுவனங்களில் கலைவாணியின் திருவுருவ புகைப்படத்தின் பார்வையில் புத்தகங்களை வைத்து அதன் முன்பாக வாழை இலையில் படையலிட்டனர். சர்க்கரை பொங்கல், சுண்டல், அவல், பொரி, கடலை மற்றும் பழங்களை கலைவாணிக்கு நைவேத்தியங்களாக படைத்து வழிபட்டனர்.

நாளை விஜயதசமி என்ற வெற்றித்திருவிழாவுடன் நவராத்திரி விழா நிறைவுபெறுகிறது. நவராத்திரி முடிந்து பத்தாவது நாளில் அம்பிகை மகிஷாசுரனை சம்ஹாரம் செய்து வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் ஏராளமான பெற்றோர், பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை முதல் முதலாக சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இந்த நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதன் மூலம் அந்த குழந்தை கல்வியில் சிறந்த தேர்ச்சி பெறுவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

1 More update

Next Story