ஒடிசாவில் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்


ஒடிசாவில் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்
x

வசந்த பஞ்சமி நாளில் சரஸ்வதி தேவியை வழிபடுவதால் ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

தமிழ்நாடடில் நவராத்திாி விழாவின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. ஆனால் வடமாநிலங்களில் சரஸ்வதி தேவியின் அவதார தினமாக கருதப்படும் வசந்த பஞ்சமி நாளன்றுதான் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வசந்த பஞ்சமியான இன்று சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

வசந்த பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிவித்து வழிபடுகிறார்கள். இன்று ஒருநாள் மட்டும் மஞ்சள் நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இந்த நாளில் சரஸ்வதி தேவியை வழிபாடு செய்து வந்தால், ஞானத்தில் சிறந்து விளங்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, பூஜையின்போது பிள்ளைகளின் கல்வி தொடர்பான பொருட்களை வைத்து வழிபடுகின்றனர். சில இடங்களில குழந்தைகளின் கல்வியைத் தொடங்குகிறார்கள்.

குறிப்பாக ஒடிசா முழுவதும் சரஸ்வதி பூஜை களைகட்டி உள்ளது. கோவில்கள் மட்டுமின்றி வீடுகள், அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், உலகப்புகழ்பெற்ற பூரி ரத யாத்திரைக்கான தேர் தயாரிப்பு பணியின் தொடக்கமாகவும் உள்ளது. பகவான் ஜெகநாதர் மற்றும் அவரது உடன்பிறந்தவர்களான பாலபத்திரர், சுபத்திரை ஆகியோர் எழுந்தருளும் மூன்று மரத்தேர்களின் கட்டுமானத்தை தொடங்குவதற்கான 'ரத கதா அனுகுல' என்ற நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

வசந்த பஞ்சமி, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பிரதமர் மோடி, ஒடிசா முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story