பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்.. திரளான பக்தர்கள் தரிசனம்


பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்.. திரளான பக்தர்கள் தரிசனம்
x

சூரசம்ஹார நிகழ்ச்சியில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா சிறப்பு வாய்ந்ததாகும். அவ்வகையில இந்த ஆண்டின் கந்தசஷ்டி விழா கடந்த 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், விஷேச அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் சூரனை முருகப்பெருமான் வதம் செய்து ஆட்கொள்ளும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கீழப்பாவூர் சுற்று வட்டார பகுதிகளான பாவூர்சத்திரம், கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, திப்பணம்பட்டி, ஆவுடையானூர், கல்லூரணி, செட்டியூர், பனையடிப்பட்டி, பெத்தநாடார்பட்டி, அரியபப்பபுரம், சிவநாடானூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பாவூர்சத்திரம் காவல் ஆய்வாளர் காளிமுத்து உதவி ஆய்வாளர் பட்டுராஜா தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். நாளை (28.10.2025) வெள்ளிக்கிழமை இரவு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

1 More update

Next Story