கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்


கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம்
x

திருக்கல்யாணத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த மாதம் 22ஆம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலையில் சுவாமி, வள்ளி- தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.‌

26ஆம் தேதி தாரகாசுர சம்ஹாரமும், 27ஆம் தேதி சூரசம்ஹாரமும் நடந்தது. விழாவின் தொடர்ச்சியாக நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடந்தன.‌ தொடர்ந்து 7 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ‌மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது.

பின்னர் மாலை 6 மணியளவில் சுவாமி வள்ளி, தெய்வானையுடன் மணக்கோலத்தில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு வேத மந்திரங்கள் முழங்க சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது.‌ இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story