திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நாளை பேட்டை உற்சவம்


திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நாளை பேட்டை உற்சவம்
x

கூப்புச்சந்திரப்பேட்டை கிராமத்தில் காலை 10 மணியில் இருந்து 11.30 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது.

திருப்பதி:

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பேட்டை உற்சவம் நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. மாக மாத பவுர்ணமியை முன்னிட்டு கோதண்டராமரின் உற்சவ விக்ரகங்கள், சீதா, லட்சுமணருடன் திருப்பதியை அடுத்த கூப்புசந்திரபேட்டை கிராமத்துக்கு மேளதாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.

நாளை காலை 6 மணிக்கு கோவிலில் இருந்து உற்சவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டு திருப்பதியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கூப்புச்சந்திரப்பேட்டை கிராமத்தைச் சென்றடைகிறார்கள். அங்கு காலை 10 மணியில் இருந்து 11.30 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம் மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது.

அதன் பிறகு மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை உஞ்சல் சேவை, மாலை 5 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கிராமோற்சவம் நடத்தப்பட்டு, அதன் பிறகு உற்சவர்கள் கோவிலுக்குள் கொண்டு வரப்படுகின்றனர்.

1 More update

Next Story