தேவகோட்டை விருசுழியாற்றில் 7 சுவாமிகள் எழுந்தருளிய தீர்த்தவாரி


தேவகோட்டை விருசுழியாற்றில் 7 சுவாமிகள் எழுந்தருளிய தீர்த்தவாரி
x
சிவகங்கை

தேவகோட்டை விருசுழி ஆற்றில் ஐப்பசி முதல் நாள் மற்றும் மாத கடைசி நாளில் 7 உற்சவர்கள் கலந்து கொள்ளும் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். அவ்வகையில் ஐப்பசி முதல் நாளான நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் நகர சிவன் கோயில், ரங்கநாத பெருமாள் கோயில், கோதண்ட ராமர் கோயில், நித்திய கல்யாணிபுரம் நித்திய கல்யாணி சமேத கைலாசநாதர் கோயில், கிருஷ்ணர் கோயில் மற்றும் கோட்டூர் சௌந்தரநாயகி சமேத அகத்தீஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில்களில் இருந்து 7 உற்சவ மூர்த்திகள், அஸ்திரதேவர்கள் சக்கரத்தாழ்வார்கள் புறப்பாடாகி நகரில் ஊர்வலமாக சென்றனர். விருசுழியாற்றை அடைந்ததும் அங்கு அஸ்திர தேவர்கள் சங்கரத்தாழ்வார்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

பின்னர் சுவாமிகள் முன்னிலையில் அஸ்திரதேவர்கள் சங்கரத்தாழ்வார்களுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து ஏழு சுவாமிகளும் புறப்பட்டு கோட்டை அம்மன் கோயில் பகுதியை அடைத்தனர். அங்கு சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பிரியா விடை கொடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story