கர்ப்பரட்சாம்பிகை கோவில் வைகாசி விசாக தேரோட்டம்

விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர் மாவட்டம் , பாபநாசம் அருகே உள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை சமேத முல்லைவனநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருவிழா கடந்த 31ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 12 நாட்கள் நடைபெறும் வைகாசி உற்சவ விழாவில் தினசரி சுவாமி, அம்பாள் காலை மற்றும் இரவு வேளைகளில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
7-வது நாள் நிகழ்ச்சியாக சுவாமி முல்லைவனநாதருக்கும் அம்பாள் கர்ப்பரட்சாம்பிகை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
விழாவின் 9வது நாள் நிகழ்ச்சியாக இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்து வழிபட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் செயல்அலுவலர் இரா. விக்னேஷ் மேற்பார்வையில், கோயில் பணியாளர்கள், கிராமவாசிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story