திருப்பதி கோவில் நடை 7ம் தேதி மூடப்படுவதாக அறிவிப்பு


திருப்பதி கோவில் நடை 7ம் தேதி மூடப்படுவதாக அறிவிப்பு
x

திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது.

அமராவதி,

ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ் பெற்ற ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை வரும் 7ம் தேதி மூடப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சந்திர கிரணத்தையொட்டி வரும் 7ம் தேதி பிற்பகல் 3.30 மணி முதல் 8ம் தேதி அதிகாலை 3 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story