ஏழுமலையான் கோவிலுக்கு 16 ஸ்கூட்டர்கள் வழங்கிய பக்தர்


தினத்தந்தி 30 Aug 2024 4:55 PM IST (Updated: 1 Sept 2024 10:08 AM IST)
t-max-icont-min-icon

புதிய ஸ்கூட்டர்களுக்கான பூஜையில் தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் கலந்துகொண்டார்.

சென்னையைச் சேர்ந்த டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் வேணு சுதர்சன், இன்று திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு 16 பைக்குகளை நன்கொடையாக வழங்கினார். இதில் 15 பைக்குகள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள். ஸ்கூட்டர்களின் மொத்த மதிப்பு ரூ.22 லட்சம் ஆகும்.

புதிய ஸ்கூட்டர்களுக்கான பூஜையில் தேவஸ்தான செயல் அதிகாரி சியாமளா ராவ் மற்றும் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் கலந்துகொண்டனர். பூஜை செய்தபின் வேணு சுதர்சன், அந்த ஸ்கூட்டர்களின் சாவிகளை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

1 More update

Next Story