திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி ஆஸ்தானம்


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி ஆஸ்தானம்
x
தினத்தந்தி 30 March 2025 5:20 PM IST (Updated: 30 March 2025 5:34 PM IST)
t-max-icont-min-icon

யுகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புதிய பட்டாடை அணிவிக்கப்பட்டது.

தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகானச ஆகம விதிகளின்படி, உகாதி ஆஸ்தானம் கடைப்பிடிக்கப்பட்டது.

காலையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சேனாதிபதி விஷ்வக்சேனருடன் இணைந்து விமான பிரகாரத்தை வலம் வந்து தங்க கதவு அருகே எழுந்தருளினர். பின்னர் மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும் புதிய பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டு அவர்களின் முன்னிலையில், விஸ்வவசு புதிய ஆண்டுக்கான பஞ்சாங்கத்தை கோவிலின் அர்ச்சகர்கள் படித்தனர். இந்நிகழ்வில் பெரிய மற்றும் சின்ன ஜீயர்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.

யுகாதி பண்டிகையையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவில் முழுவதும் தேவஸ்தான தோட்டக்கலை துறை சார்பில் விதவிதமான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோவிலுக்கு வெளியேயும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன.

1 More update

Next Story