ஊத்துக்கோட்டை: திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


ஊத்துக்கோட்டை: திரௌபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

பக்தர்கள் கோவில் அருகே உள்ள குளத்தில் புனித நீராடி, அதன்பின் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள லட்சிவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பெரம்பூர் பாஞ்சாலி நகரில் புகழ்பெற்ற திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தீமிதி திருவிழா கடந்த 1-ம் தேதி தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், கூழ் வார்த்தல், அம்மன் வீதி உலா நடைபெற்றது. தீமிதிக்கும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர்.

முக்கிய நிகழ்ச்சியான தீ மிதித்தல் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவில் அருகே உள்ள குளத்தில் புனித நீராடி, அதன்பின் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் பாலவாக்கம், லட்சிவாக்கம், சென்னங்காரணை, சூளைமேனி, தாராட்சி பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story