வேதாரண்யம்: 30 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்


வேதாரண்யம்: 30 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற விநாயகர் ஊர்வலம்
x

விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சுற்றுச்சூழலுக்கு மாசுபடாத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை நிறுவப்பட்டு பூஜை செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் கிராமத்தில் உள்ள செல்வவிநாயகர் ஆலயத்தில், சிலை நிறுவப்பட்டு ஊர்வலமாக கொண்டு சென்று கடலில் கரைக்கப்படும். அவ்வகையில் 27ஆம் ஆண்டு விநாயகர் ஊர்வலம் இன்று விமரிசையாக நடைபெற்றது.

விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக சுற்றுச்சூழலுக்கு மாசுபடாத வகையில் களிமண்ணால் செய்யப்பட்ட 10 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை நடைபெற்றது. பின்னர் விநாயகர் ஊர்வலம் தொடங்கியது. மேளதாளம், பேண்ட் வாத்தியங்கள் முழங்க புறப்பட்ட இந்த ஊர்வலம் செம்போடை, புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட கிராமங்கள் வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்றது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

1 More update

Next Story