பரமத்தி வேலூரில் விஷ்ணுபதி புண்ணியகால ஆராதனை விழா

புண்ணியகால ஆராதனை விழாவின்போது, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
பரமத்தி வேலூரில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவ விஷ்ணு வல்லப விநாயகர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாளுக்கு நேற்று (வியாழக்கிழமை) விஷ்ணுபதி புண்ணிய கால ஆராதனை விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு யாக வேள்விகள் நடைபெற்று பூர்ணாஹுதி சமர்ப்பிக்கப்பட்டது.
காலை 6 மணிக்கு கோ பூஜையும், 7 மணி அளவில் 21 திரவியங்களினால் ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், கலசாபிஷேகமும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பஞ்சாரத்தி, ஏகாரத்தி, அடுக்க ஆரத்தி உடன் மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story






