ராசல் கைமாவில் சாலை தடுப்புச் சுவரில் சரக்கு வேன் மோதி விபத்து; அமீரக நபர் பலி


ராசல் கைமாவில் சாலை தடுப்புச் சுவரில் சரக்கு வேன் மோதி விபத்து; அமீரக நபர் பலி
x

ராசல் கைமாவின் சமல் பகுதியில் சாலை தடுப்புச் சுவரில் சரக்கு வேன் மோதி விபத்துக்குள்ளானதில் அமீரக நபர் பலியானார்.

ராசல் கைமா:

ராசல் கைமாவின் சமல் பகுதியில் உள்ள முக்கிய சாலை ஒன்றில் ஒரு சரக்கு வேன் (பிக்அப் வேன்) வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த வேன் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட வேகமாக சென்றதால் அங்குள்ள தகவல் பலகையின் மீது மோதி, அதன் பின்னர் சாலையின் தடுப்புச்சுவரில் மோதியது. இதன் காரணமாக அந்த வேனில் பயணம் செய்த அமீரகத்தைச் சேர்ந்த நபர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அந்த வேனை ஓட்டிச் சென்ற டிரைவர் படுகாயமடைந்தார்.

இந்த விபத்து குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் படுகாயமடைந்த டிரைவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் அந்த டிரைவர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் பலியான அமீரகத்தைச் சேர்ந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த விபத்து குறித்து ராசல் கைமா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story