கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு


கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 22 July 2024 7:32 AM GMT (Updated: 22 July 2024 11:44 AM GMT)

உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை,

அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

"ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண். 022024 14032024 அன்று வெளியிடப்பட்டது.

நேரடி நியமனத்திற்கான போட்டித் தேர்வு 04-08-2024 அன்று நடைபெறவிருத்த நிலையில், நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story