கணுக்காலில் காயம்; சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் விளையாடவில்லை என அறிவிப்பு


கணுக்காலில் காயம்; சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் விளையாடவில்லை என அறிவிப்பு
x

காயம் காரணமாக இன்றைய சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நெய்மார் விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தோகா,

22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிரேசில் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் நெய்மார் வலது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்றைய சுவிட்சர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கணுக்காலில் வீக்கம் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நெய்மார், இது கடினமான தருணங்களில் ஒன்று என்றும், உலகக் கோப்பை போட்டிக்கு களம் திரும்ப நிச்சயம் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.


Next Story