கத்தார் உலகக்கோப்பையை அறிமுகப்படுத்தும் தீபிகா படுகோனே..!


கத்தார் உலகக்கோப்பையை அறிமுகப்படுத்தும் தீபிகா படுகோனே..!
x
தினத்தந்தி 6 Dec 2022 12:19 PM GMT (Updated: 6 Dec 2022 12:21 PM GMT)

நடிகை தீபிகா படுகோனே உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு உலகக் கோப்பையை அறிமுகம் செய்துவைக்கிறார்

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கி நடைபெறுகிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி கத்தார் நாட்டில் உள்ள லுஸைல் ஐகானிக் மைதானத்தில் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் நடிகை தீபிகா படுகோனே உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்தின் இறுதிப் போட்டியில் கலந்துகொண்டு உலகக் கோப்பையை அறிமுகம் செய்துவைக்கிறார். இந்த அங்கீகாரம் பெறும் முதல் இந்திய நட்சத்திரம் என்ற பெருமைக்கும் தீபிகா உரியவராகிறார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தீபிகா படுகோன் விரைவில் கத்தாருக்கு செல்லவுள்ளார். 36 வயதான தீபிகா படுகோனே உலகில் அதிகம் பேரால் பார்க்கப்படும் விளையாட்டு நிகழ்வில் இந்த அங்கீகாரம் பெறும் முதல் இந்திய நட்சத்திரம் என்ற பெருமைக்கும் தீபிகா உரியவராகிறார்.


Next Story