தோல்வி எதிரொலி: ஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கம்


தோல்வி எதிரொலி: ஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கம்
x

ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து லூயிஸ் என்ரிக் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார்.

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து தொடரில், கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 0-3 என்ற கோல் கணக்கில் மொராக்கோவிடம் தோல்வி கண்டு வெளியேறியது.

இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக ஸ்பெயின் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து லூயிஸ் என்ரிக் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக 21 வயதுக்கு உட்பட்ட ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக இருந்த 61 வயது முன்னாள் வீரர் லூயிஸ் டி லா பெண்டே புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Next Story