ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க முடியாது-பாகிஸ்தான் மந்திரி


ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க முடியாது-பாகிஸ்தான் மந்திரி
x
தினத்தந்தி 17 Nov 2022 4:09 PM IST (Updated: 17 Nov 2022 4:27 PM IST)
t-max-icont-min-icon

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க முடியாது என பாகிஸ்தான் நிதி மந்திரி கூறி உள்ளார்

இஸ்லாமாபாத்:

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவால் தடுக்க முடியாது விரைவில் வாங்குவோம் என்றும் பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 13 அன்று துபாயில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - நவாஸ் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய போது இஷாக் தார் இதனை தெரிவித்து உள்ளார்.

செப்டம்பரில் அமெரிக்க பயணத்தின் போது இஷாக் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.

"எங்கள் அண்டை நாடான இந்தியாவும் ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால், ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தடுக்க முடியாது என்று நாங்கள் அமெரிக்க (அரசுத்துறை) அதிகாரிகளிடம் கூறிய உள்ளோம் என இஷாக் தார் குறிப்பிட்டு உள்ளார்.

1 More update

Next Story