உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க் - துனிசியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 'டிரா '


உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க் - துனிசியா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா
x

ஆட்ட நேர முடிவில் 0-0 என டிராவில் முடிந்தது

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. . இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது.

இந்தத்தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டென்மார்க் - துனிசியா அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. கோல் அடிக்க முடியவில்லை .இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 0-0 என டிராவில் முடிந்தது.

இதனை தொடர்ந்து நடந்த 2வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.ஆட்ட நேர முடிவில் 0-0 என சமநிலையில் முடிந்தது.இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.


Next Story