உலக கோப்பை கால்பந்து: செனகலை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த நெதர்லாந்து...!


உலக கோப்பை கால்பந்து: செனகலை வீழ்த்தி  வெற்றியை பதிவு செய்த நெதர்லாந்து...!
x

Image Courtesy: AFP

நெதர்லாந்து அணியில் காக்போ, டேவி கிளாசென் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ஈரானை 6-2 என்ற கணக்கில் பந்தாடியது.

இதையடுத்து குரூப் ஏ பிரிவில் நடந்த ஆட்டத்தில் நெதர்லாந்து மற்றும் செனகல் அணிகள் மோதின. இதில் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க முயற்சி செய்த அனைத்தும் வீணாகின. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் இல்லாமல் 0-0 என்ற கணக்கில் இருந்தது.

இதையடுத்து தொடங்கிய 2வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினர். இருந்தும் ஆட்டத்தில் கோல எதுவும் அடிக்க இயலவில்லை. ஆட்டம் சமனில் முடியும் என எதிர்பார்த்திருந்த நேரத்தில் ஆட்டத்தில் 84வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் கோடி காக்போ கோல் அடித்து அசத்தினார்.

இதனால் அந்த அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து கூடுதல் நேரத்தில் நெதர்லாந்து அணி மேலும் ஒரு கோல் அடிக்க அந்த அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியில் காக்போ, டேவி கிளாசென் ஆகியோர் தலா 1 கோல் அடித்தனர்.


Next Story