உலகக்கோப்பை கால்பந்து: கானா அணியை வீழ்த்தி போர்ச்சுகல் வெற்றி


உலகக்கோப்பை கால்பந்து: கானா அணியை வீழ்த்தி போர்ச்சுகல் வெற்றி
x

Image Courtesy : @selecaoportugal twitter

கானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற போட்டியில் போர்ச்சுகல்-கானா அணிகள் மோதின. இந்த போட்டியின் 65-வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். அடுத்ததாக 73-வது நிமிடத்தில் கானா அணி வீரர் அண்ட்ரே அயூ கோல் அடித்தார்.

தொடர்ந்து போர்ச்சுகல் வீரர்கள் ஜாவோ பெலிக்ஸ் 78-வது நிமிடத்திலும், ரபேல் லேயோ 80-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இதையடுத்து 89-வது நிமிடத்தில் கானா வீரர் ஒஸ்மான் புகாரி ஒரு கோல் அடித்தார். இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்றது.


Next Story