உலகக்கோப்பை கால்பந்து: கேமரூன் அணியை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வெற்றி


உலகக்கோப்பை கால்பந்து: கேமரூன் அணியை வீழ்த்தி சுவிட்சர்லாந்து வெற்றி
x
தினத்தந்தி 24 Nov 2022 12:26 PM GMT (Updated: 24 Nov 2022 12:27 PM GMT)

முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமநிலையில் இருந்தன .

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தத்தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - கேமரூன் அணிகள் மோதின.இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் கோல் அடிக்க முடியவில்லை.இதனால் முதல் பாதியில் இரு அணிகளும் 0-0 என சமநிலையில் இருந்தன .

பின்னர் நடைபெற்ற 2 வதுபாதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியின் பிரீல் எம்போலோ 48வது நிமிடத்தில் கோல் அடித்தார் .இதற்கு பதில் கோல் அடிக்க கேமரூன் அணி கடிமையாகி போராடியும் கோல் அடிக்க முடியவில்லை.இதனால் ஆட்ட நேர முடிவில் 1-0 என சுவிட்சர்லாந்து வெற்றி பெற்றது.


Next Story