உலகக்கோப்பை கால்பந்து: 2வது சுற்றில் இன்று நடைபெறும் போட்டிகள்


உலகக்கோப்பை கால்பந்து: 2வது சுற்றில் இன்று நடைபெறும் போட்டிகள்
x

இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2வது சுற்று போட்டியில் மொராக்கோ - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

தோகா,

உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த மாதம் 20-ம் தேதி கத்தாரில் தொடங்கியது. இதில் 32 நாடுகள் பங்கேற்றன. அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகள் நாக்-அவுட் ரவுண்டான 2-வது சுற்றுக்கு நுழையும்.

அதன்படி, 16 அணிகள் 2வது சுற்றுக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், 2வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் இதுவரை நெதர்லாந்து, அர்ஜெண்டினா, பிரான்ஸ், இங்கிலாந்து, குரேஷியா, பிரேசில் ஆகிய அணிகள் காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன.

இந்த நிலையில், இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 2வது சுற்று போட்டியில் மொராக்கோ - ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன. பின்னர் இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் போர்ச்சுகல் - சுவிட்சர்லாந்து அணிகள் மோதுகின்றன.


Next Story