வயிற்றுக்குள் குடற்புழுக்கள் வராமல் தடுக்கும் வழிமுறைகள்

நோய்த்தொற்றுகள் அதிகம் வாய்ப்புள்ள சுகாதாரமற்ற இடங்களில் இருந்து பழங்கள், காய்கறிகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
குடற்புழுக்கள் பெரும்பாலும் அசுத்தமான நீர் அல்லது உணவு உட்கொள்வது, சுகாதாரமற்ற கழிப்பறை வசதிகள் மற்றும் கைகளை சரியாக கழுவாததால் ஏற்படுகின்றன. மண், அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் புழுக்களின் முட்டைகள் உடலுக்குள் நுழைந்து குடலில் வாழத்தொடங்குகின்றன. இந்த புழுக்கள் இரைப்பை புழுக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
வயிற்றில் புழுக்கள் இருந்தால் வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், பசியின்மை, எடையிழப்பு, ஆசனவாயில் அரிப்பு, தூக்கமின்மை போன்ற அறிகுறிகள் தோன்றும்.
குடற்புழுக்கள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
1. அடிக்கடி கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
2. நகங்களை நன்றாக வெட்ட வேண்டும்.
3. சாப்பிடும் முன்பும், கழிவறைக்கு சென்று வந்த பிறகும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
4. பல் துலக்கும் முன்பும், பின்பும் பிரஸை கழுவ வேண்டும்.
5. டவல்கள் மற்றும் படுக்கை விரிப்புகளை சூடான நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
6. குழந்தைகளின் விளையாட்டு பொம்மைகளையும் சுத்தமாக வைத்திருக்கவும்.
7. சமையலறை மற்றும் கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்கவும்.
பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள்...
1. பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும்.
2. செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும்.
3. செல்லப்பிராணிகளின் கழிவுகள் அருகே குழந்தைகளை விளையாட விடக்கூடாது.
4. நோய்த்தொற்றுகள் அதிகம் வாய்ப்புள்ள சுகாதாரமற்ற இடங்களில் இருந்து பழங்கள், காய்கறிகள் வாங்கக் கூடாது.
5. அசுத்தமான இடங்களில் வெறுங்காலுடன் நடக்கக் கூடாது.






