அமெரிக்காவில் 2,500 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்


அமெரிக்காவில் 2,500 பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜோ பைடன்
x
தினத்தந்தி 19 Jan 2025 2:58 AM IST (Updated: 19 Jan 2025 4:05 AM IST)
t-max-icont-min-icon

அமெரிக்க வரலாற்றில் அதிக பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி என்ற பெருமையை ஜோ பைடன் பெற்றுள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்காவில் கடந்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. இதில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவியேற்பு விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.அப்போது ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக்காலமும் நிறைவு பெறுகிறது.

இந்தநிலையில் தான் பதவி விலகும் முன்னர் அவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். அதன்படி வன்முறையற்ற போதைப்பொருள் குற்றவாளிகள் 2 ஆயிரத்து 500 பேருக்கு அவர் பொதுமன்னிப்பு மற்றும் தண்டனை குறைப்புகளை வழங்கி உத்தரவிட்டார். இதன்மூலம் அமெரிக்க வரலாற்றில் அதிக பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி என்ற பெருமையை இவர் பெற்றிருப்பதாக வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.

1 More update

Next Story