கர்நாடக கவர்னருடன் சித்தராமையா சந்திப்பு - ஆட்சியமைக்க உரிமைகோரினார்...!


கர்நாடக கவர்னருடன் சித்தராமையா சந்திப்பு - ஆட்சியமைக்க உரிமைகோரினார்...!
x

கர்நாடக கவர்னரை சந்தித்த சித்தராமையா ஆட்சியமைக்க உரிமைகோரினார்.

பெங்களூரு,

கர்நாடாக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றுள்ளது.

இதனிடையே, தேர்தலில் வெற்றிபெற்றபோதும் புதிய முதல் மந்திரி யார் என்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் டிகே சிவக்குமார், சித்தராமையா இடையே கடும் போட்டி நிலவியது. இருவரையும் கட்சி மேலிடம் அழைத்து பேசியது. 5 நாட்களாக பரபரப்பு நீடித்த நிலையில் கர்நாடகாவின் புதிய முதல் மந்திரியாக சித்தராமையாவும் துணை முதல் மந்திரியாக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்க இருப்பதாக காங்கிரஸ் மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடகாவில் ஆட்சியமைக்க சித்தராமையா உரிமைகோரியுள்ளார். சித்தராமையா, டிகே சிவக்குமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று அம்மாநில கவர்னரை சந்தித்து உரிமைகோரியுள்ளனர். கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை இன்று சந்தித்த சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆட்சியமைக்க சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கிய ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் வழங்கினர்.

கர்நாடகாவில் ஆட்சியமைக்க சித்தராமையா உரிமைகோரியுள்ள நிலையில் வரும் 20ம் தேதி பெங்களூருவில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கவர்னர் பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.


Next Story