செலெகோர் சவுண்ட்பார்


செலெகோர் சவுண்ட்பார்
x

செலெகோர் நிறுவனம் புதிதாக சி.எல்.பி 21 என்ற பெயரிலான சவுண்ட்பாரை அறிமுகம் செய்துள்ளது.

புளூடூத் இணைப்பு வசதி கொண்ட இந்த சவுண்ட் பார் மிகச்சிறப்பான ஒலியை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. எந்த ஒரு ஆடியோ சாதனத்துடனும் இதை இணைத்து மிகச் சிறந்த இசையைக் கேட்டு மகிழலாம்.

இதில் பண்பலை வானொலி உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மற்றும் யு.எஸ்.பி. வசதி கொண்டது. ஏ.யு.எக்ஸ். கேபிள் மூலமும் இதை இணைத்துக் கொள்ளலாம். உள்ளீடாக மைக்ரோபோன் உள்ளது. இதில் உள்ள பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டால் 10 மணி நேரம் வரை செயல்படும். எல்.இ.டி. விளக்குகள் உள்ளன. இதன் விலை சுமார் ரூ.3,499.


Next Story