இன்பினிக்ஸ் ஹாட் 30 ஐ ஸ்மார்ட்போன்


இன்பினிக்ஸ் ஹாட் 30 ஐ ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 6 April 2023 1:45 PM GMT (Updated: 6 April 2023 1:45 PM GMT)

இன்பினிக்ஸ் நிறுவனம் புதிதாக ஹாட் 30 ஐ என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

6.6 அங்குல எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, நீலம் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.8,999.


Next Story